கடன்களால் அரசுக்கு பெரும் நெருக்கடி!

SRILANKA/

இந்த ஆண்டில் மொத்தமாக பெற்றுக்கொள்ளக்கூடிய கடன்களில் 80 வீதமான கடனை தற்போதே அரசாங்கம் பெற்று விட்டதாக மத்திய வங்கித் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல் ஆறு மாதங்களில் கூடுதலான கடன் பெற்றுக்கொண்டமையினால் எதிர்வரும் ஆறு மாத காலப்பகுதியில் அரசாங்கம் பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டில் அரசாங்கத்தினால் பெற்றுக்கொள்ளக்கூடிய உள்நாட்டு, வெளிநாட்டு கடன்தொகை 1579 பில்லியன் ரூபா என வரவு செலவுத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்து. இதுவரையில் அரசாங்கம் 1250 பில்லியன் ரூபா பணத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது. எதிர்வரும் ஆறு மாத காலத்திற்கு பெற்றுக்கொள்ளக்கூடிய கடனின் தொகை வெறும் 325 பில்லியன் ரூபா என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: