ஒமிக்ரோனை தடுக்க சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன:நாமல் ராஜபக்ச

ஒமிக்ரோன் என்ற வீரியம் கொண்ட கொரோனா வைரஸ் திரிபு நாட்டுக்கு பரவுவதை தடுக்க அரசாங்கம் என்ற வகையில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச(Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஆறு நாடுகள் தொடர்பாக கடுமையாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் மூன்று நாட்களுக்கு முன்னரே இது தொடர்பான தீர்மானத்தை எடுத்தது.

சுகாதார அமைச்சும் இது குறித்து விசேட கவனத்தை செலுத்தியுள்ளது. உலகம் வீரியம் கொண்ட கொரோனா திரிபை கண்டறியும் முன்னரே இலங்கை பூஸ்டர் தடுப்பூசியை வழங்கியது.
ஜனாதிதி கோட்டாபய ராஜபக்சவும் அரசாங்கம் இந்த விடயத்தில் விசேட அக்கறையும் செயற்பட்டு வருகிறது. அனைத்து விமான நிலையங்களிலும் சுகாதார கண்காணிப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

வருகை தரும் சகல விமான பயணிகளின் சுகாதார நிலைமைகள் தொடர்ந்தும் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பான சம்பந்தப்பட்ட துறையினர் விசேட மென் பொருள் செயலியையும் அறிமுகப்படுத்தியுள்ளனர் எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!