இந்திய முதலீடுகளை அதிகரிப்பது குறித்து அருண் ஜெட்லியுடன் மங்கள சமரவீர பேச்சு

சிறிலங்காவில் எதிர்காலத்தில் முதலீடுகளை அதிகரிப்பது தொடர்பாக, இந்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியுடன், சிறிலங்கா நிதியமைச்சர் மங்கள சமரவீர பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

ஆசிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி வங்கியின் இரண்டாவது ஆண்டுப் பொதுக்கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை தென்கொரியாவின், ஜேஜூ தீவில் இடம்பெற்றது. இதில் சிறிலங்கா, இந்திய நிதியமைச்சர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் பக்க நிகழ்வாக, இந்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கும், சிறிலங்கா நிதியமைச்சர் மங்கள சமரவீரவுக்கும் இடையிலான பேச்சுக்கள் இடம்பெற்றன.

இதன்போதே எதிர்காலத்தில் சிறிலங்காவில் இந்திய முதலீடுகளை அதிகரிப்பது குறித்த முக்கியமாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

Tags: ,