10 வருடங்கள் நாட்டை இராணுவத்திடம் ஒப்படைக்குமாறு ஜனாதிபதிக்கு பிரபல தேரர் யோசனை

நாட்டில் மக்கள் வைத்திருந்த எதிர்பார்ப்பெல்லாம் தவிடுபொடியாகியுள்ளதால் நாட்டை 10 வருடங்களுக்கு இராணுவத்தினரிடம் ஒப்படைக்குமாறு தென் மாகாணத்தின் பிரசித்தி பெற்ற தேரர்களில் ஒருவரான கெட்டமானே தம்மாலங்கார தேரர் (Getamanne Dhammalankara Thero) கோரிக்கை விடுத்துள்ளார்.

மாத்தறையில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அத்துடன் நாட்டின் மீதும், மக்கள் மீதும் அன்பு இருக்குமாயின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa), 10 வருடங்களுக்கு நாட்டை இராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும் என கேட்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!