இரசாயன உர இறக்குமதி தடை – வெளியாகும் புதிய வர்த்தமானி!

இரசாயன உர இறக்குமதியை தடை செய்யும் வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்வது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ கையொப்பமிட்டுள்ளார்.
இதன்படி இன்று முதல் தடை நீக்கப்பட்டுள்ளதாக இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் தமயந்தி கருணாரத்ன தெரிவித்துள்ளார்

இதேவேளை, கிளைபோசேட் உள்ளிட்ட களைநாசினிகளை இறக்குமதி செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் மூலம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் glyphosate மீதான தடையை மேலும் அமுல்படுத்துவதற்குமான வர்த்தமானி அரச அச்சகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் அச்சிடுவதற்கான வர்த்தமானி அறிவித்தல் இதுவரை தமக்கு கிடைக்கவில்லை என அரசாங்க அச்சக பிரதம அதிகாரி கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!