இந்தியாவுக்குள் நுழைந்தது ஒமிக்ரான் வைரஸ்!

மராட்டியத்தில் ஒமிக்ரான் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. மும்பை விமான நிலையத்தில் ஒமிக்ரான் கொரோனா தடுப்பு பற்றி மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மேயர் கிஷோரி பட்னாகர் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

இதுபற்றி அவர் கூறும்போது, விமான நிலையத்தில் வந்து இறங்கும் ஒவ்வொரு பயணியையும் பரிசோதனை செய்கிறோம் என்று அதிகாரிகள் என்னிடம் கூறினர். பயணிகளை தனிமைப்படுத்துதலுக்கு அனுப்பி வைக்கிறோம். மும்பையில் ஒமிக்ரான் பாதிப்பு இதுவரை இல்லை என்று அவர் கூறினார்.

எனினும், தென்ஆப்பிரிக்கா அல்லது ஒமிக்ரான் ஆபத்து நிறைந்த பிற நாடுகளில் இருந்து மராட்டியத்திற்கு வந்த 6 பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என மராட்டிய பொது சுகாதார துறை தெரிவித்து உள்ளது. அவர்கள் அறிகுறிகள் அற்றவர்களாகவோ அல்லது லேசான அறிகுறிகளை கொண்டவர்களாகவோ இருக்கின்றனர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியும் பணியும் நடந்து வருகிறது என்றும் தெரிவித்து உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!