அமெரிக்காவில் பயங்கரம்: பள்ளியில் துப்பாக்கிச்சூடு – மூன்று பேர் பலி!

அமெரிக்காவில் உயர்நிலைப் பள்ளி ஒன்றில் நடந்த திடீர் துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் உயிரிழந்திருப்பதாகவும், ஆறு பேர் காயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் Michigan-வில் உள்ள Detroit பகுதியில் அமைந்திருக்கும் Oxford உயர்நிலைப் பள்ளியில் சற்று முன்பு நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். 6 பேர் காயமடைந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் 15 வயது மதிக்கத்தக்க மாணவனை பொலிசார் கைது செய்துள்ளனர், அவரிடம் இருந்து கைத்துப்பாக்கி ஒன்று இருப்பதை பறிமுதல் செய்துள்ளனர்.

உயிரிழந்த மூன்று பேரும் மாணவர்கள் என்று நம்பப்படுவதாகவும், ஆனால் அவர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1 மணிக்கு முன்பாக நடந்துள்ளது.

அதன் பின்னரே பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதில் காயமடைந்த 6 பேரில் ஒருவர் ஆசிரியர் என்று அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

தற்போதைக்கு மேலும் எந்த ஒரு விபரமும் பொலிசார் கூற மறுத்துவிட்டனர், கொல்லப்பட்ட மூன்று பேரும் மாணவர்கள் என்று நம்பப்படுகிறது என்று அண்டர்ஷெரிப் கூறினார். அவர்களின் அடையாளங்கள் வெளியிடப்படவில்லை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!