பெண் சமத்துவத்தில் இலங்கையின் பின்னிலைக்கான காரணம்- எதிர்கட்சி தலைவர் சுட்டிக்காட்டு

இலங்கையின் சனத்தொகையில் பெரும்பாலானோர் பெண்களாக இருக்கும்போது அவர்களுக்காக இலங்கையில் ஒரு அமைச்சு அமைக்கப்படாமை குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இந்த கேள்வியை நாடாளுமன்றில் எழுப்பியுள்ளார்.

உலக ஆண் பெண் சமத்துவத்தை பார்க்கும் போது 2006 ஆம் ஆண்டில் 115 நாடுகளின் பட்டியலில் இலங்கை 13வது இடத்தை பெற்றிருந்தது.

எனினும் 2021 ஆண்டின்போது 153 நாடுகளில் 102 இடத்துக்கு இலங்கை வீழ்ச்சியடைந்துள்ளது.
அதாவது 89 இடங்களால் இலங்கை பின்னால் தள்ளப்பட்டுள்ளது.

எனினும் அன்று பின்னிலையில் இருந்த பங்களாதேஸ் இன்று முன்னிலைக்கு வந்துள்ளது என்று சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.

கல்வி உட்பட்ட முக்கிய துறைகளில் பெண்களுக்கான முன்னுரிமைகள் வழங்கப்படாமையே இலங்கையின் இந்த வீழ்ச்சிக்கான காரணம் என்று அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை இலங்கையின் பெருந்தோட்ட பகுதிகளில் 2006ஆம் ஆண்டு 46வீதமாக இருந்த பெண்களின் கல்வியறிவு 2016ஆம் ஆண்டு 33 ஆக குறைந்துள்ளது.

இன்றும் அந்த நிலை தொடர்வதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் பெண்கள் மற்றும் சிறுவர் நீதிமன்றங்கள் மாவட்டங்கள் தோறும் அமைக்கப்படவேண்டும் என்ற பாிந்துரையையும் அவர் முன்மொழிந்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!