உருவாகிறது இன்னொரு புயல்!

வங்காள விரிகுடா மற்றும் வடக்கு மற்றும் தெற்கு அந்தமான் கடற்பகுதியில் நாளை மாலை 4.00 மணி வரை மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
    
இந்த கடற்பரப்புகளில் தற்போது மீன்பிடி மற்றும் கடற்பயணத்தில் ஈடுபடுபவர்கள் கரைக்கு அல்லது பாதுகாப்பான இடங்களுக்கு வருமாறு திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தெற்கு தாய்லாந்து கடற்பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நாளை தாழமுக்கமாக உருவாகி தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக்கடலில் நிலைகொள்ளலாம் என்றும் கடல் பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும் என்றும் வளிமண்டலவியல் திணைக்கள பேச்சாளர் தெரிவித்தார்.

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக உருவாகி, வரும் 4ஆம் திகதியளவில் இந்தியாவின் வடக்கு ஆந்திர கடலோர பகுதியை கரை கடக்கும் என பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!