மேலும் ஒரு தொகை பைசர் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன

அமெரிக்காவில் இருந்து மேலும் ஒரு தொகை பைஸர் கொவிட் தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

இதன்படி 1 லட்சத்து 82 ஆயிரத்து 400 பைஸர் தடுப்பூசிகள் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக இவ்வாறு நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த தடுப்பூசி தொகை அரச ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகாரசபையின் களஞ்சியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!