6 மணித்தியாலங்களுக்கு பின்னர் வழமைக்கு திரும்பிய மின்விநியோகம்..!

நாட்டில் தடைப்பட்டிருந்த மின் விநியோக நடவடிக்கைகள் 6 மணித்தியாலங்களின் பின்னர் வழமைக்கு திரும்பியுள்ளதாக மின்சாரசபை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், அநுராதபுரம், ஹபரன, லக்ஸபான, அதுறுகிரிய, கொத்மலை, கட்டுநாயக்க மற்றும் பியகம ஆகிய பிரதான மின்விநியோக மார்க்கங்களின் நடவடிக்கைகள் இவ்வாறு வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்க்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் ஏற்பட்ட மின் விநியோகத்தடையானது மின் பொறியியலாளர் சங்கத்தின் திட்டமிடப்பட்ட சதியாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

மின்சார மீள் இணைப்பு பணிகளை மின் பொறியியலாளர் சங்கம் திட்டமிட்டே இழுத்தடிப்பு செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மின் பொறியலாளர் சங்கம் மேற்கொண்டு வந்த சட்டப்படி கடமையாற்றும் தொழிற்சங்க நடவடிக்கை தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக அதன் தலைவர் செளம்ய குமாரவடு தெரிவித்துள்ளார்.

அத்துடன், எதிர்வரும் திங்கற் கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!