இலங்கையில் ஒமிக்ரோன் – முழு விபரம் இதோ..!

இலங்கையர் ஒருவருக்கு ஒமிக்ரோன் மாறுபாட்டுடனான கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த நபர் கடந்த 23 ஆம் திகதி நாடுதிரும்பியுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன

இதன்பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் குறித்த நபருக்கு ஒமிக்ரோன் மாறுபாட்டுடனான கொவிட் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

இந்த நிலையில் தொற்று பரவலை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் பொது மக்கள் தேவையற்ற அச்சமடையத்தேவையில்லை என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!