அபுதாபிக்குப் புறப்பட்டார் ஜனாதிபதி!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு நேற்று பிற்பகல் புறப்பட்டுச் சென்றுள்ளார். ஐக்கிய அரபு இராச்சியத்தின் தலைநகரான அபுதாபியில் இடம்பெறவுள்ள 5 ஆவது இந்திய சமுத்திர மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி இந்த விஜயத்தினை மேற்கொண்டுள்ளார்.
    
இன்றும் நாளையும் இந்த மாநாடு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சாதாரண பயணிகள் முனையத்தை வந்தடைந்த ஜனாதிபதி, அங்கு பயணிகளுடன் கலந்துரையாடினார்.

இந்திய சமுத்திர பிராந்தியத்தில் உள்ள நாடுகள் மற்றும் சமுத்திரத்தை பரவலாகப் பயன்படுத்தப்படும் பிற நாடுகளின் பொதுவான பிரச்சினைகள் மற்றும் அபிலாஷைகள் தொடர்பில் விவாதிக்க “இந்திய சமுத்திர மாநாடு” 2016 இல் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!