ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இல்லத்திலும் எரிவாயு கசிவு! நாடாளுமன்றில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் (Gotabaya Rajapaksa) இல்லத்திலும் எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் (Mujibur Rahman) தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் நேற்றைய தினம் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் மிரிஹானவில் அமைந்துள்ள இல்லத்தில் இவ்வாறு எரிவாயு கசிவு பதிவாகியுள்ளது என பத்திரிகையொன்றில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,
கடந்த நவம்பர் மாதம் 26ம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. எரிவாயு கசிவு குறித்து உடனடியாக நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டது.
பின்னர் புதிய எரிவாயு கொள்கலன் ஒன்று ஜனாதிபதியின் இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பத்திரிகையொன்றில் இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இந்த விடயம் பொய் என்றால் அந்தப் பத்திரிகைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட முடியும்.
எரிவாயு பிரச்சினைக்கு விநியோகத்தினை நிறுத்துவதன் மூலம் தீர்வு காண முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!