போராட்டக்காரர்கள் மீது அதிவேகமாக வாகனத்தை செலுத்தி பலரது உயிரை பறித்த மியான்மர் இராணுவம்!

மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது, இராணுவம் வாகனம் அவர்கள் மீது பயங்கரமாக மோதியதால், இதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த நவம்பர் மாதம் மியான்மரில் நடந்த தேர்தலில், நோபல் பரிசு பெற்ற Aung San Suu Kyi கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், இந்த தேர்தலில் நிறைய முறைகேடுகள் மற்றும் மோசடிகள் நடந்திருப்பதாக கூறி, அந்நாட்டு இராணுவம் ஆட்சியை கடந்த பிப்ரவரி மாதம் களைத்தது.
    
இதனால் இராணுவத்திற்கு எதிராக அங்கு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் படி Yangon-ல் நேற்று இராணுவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அமைதியான முறையில் போராட்டம் நடைபெற்றுள்ளது.

போராட்ட குழுவினர், எதிர்ப்பு தெரிவித்த படி சாலையில் நடந்து சென்றுள்ளனர். அப்போது பின்னே வந்த இராணுவ வாகனம் ஒன்று அவர்கள் மீது கடுமையாக மோதியது. இதனால் அங்கிருந்தவர்கள் சிதறி அடித்து ஓடினர்.

அடிபட்டு கிழே விழுந்தவர்கள் மீது இராணுவ வாகனம் ஏறி இறங்கியதால், இதில் சிலர் நசுங்கி உயிரிழந்துள்ளனர். தற்போது அவரை இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் பலியாகியிருப்பதாகவும், 15 பேர் படுகாயமடைந்திருப்பதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
இதுவரை நடைபெற்று வரும் இது போன்ற போராட்டங்களினால் சுமார் 1300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இது குறித்து இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், போராட்டக்காரர்கள் வன்முறையை தூண்டியதன் காரணமாகவே இது நடந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

மேலும், இதில் இருந்து உயிர் தப்பிய நபர் கூறுகையில், நான் டிரக்கில் அடிபட்டு கீழே விழுந்தேன். அதன் பின் இராணுவ வீரர் ஒருவர் என்னை துப்பாக்கியால் தாக்கினார். நான் அவரிடம் இருந்து தப்பிப்பதற்காக ஓடிய போது, அவர் என்னை நோக்கி சுட்டார். ஆனால் அதிஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டதாக கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!