
ஹைசன் சிட்டியின் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி கூடத்தில் அந்த மாணவர் சினிமாவை பார்த்துக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டார் இது குறித்து ஒரு உள்ளூர் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
தென் கொரிய திரைப்படங்கள், பதிவுகள், தொகுப்புகள், புத்தகங்கள், பாடல்கள், ஓவியங்கள் மற்றும் புகைப்படங்களை நேரடியாகப் பார்த்த, கேட்ட, அல்லது வைத்திருப்பவர்களுக்கு ‘ ஐந்து ஆண்டுகளுக்கு மேல் மற்றும் 15 ஆண்டுகளுக்கு குறைவாக தண்டனை கிடைக்கும்.
முன்னதாக, பிரபல நெட்பிளிக்ஸ் நிகழ்ச்சியான ஸ்க்விட் கேமைப் பார்த்து வடகொரியாவில் மாணவர்கள் பிடிபட்டதால் கடுமையான தண்டனை பெற்றதாக அமெரிக்க செய்தி ஊடகமான ரேடியோ பிரீ ஏசியா தெரிவித்து இருந்தது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!