பாகிஸ்தானை போன்றே இலங்கையிலும் பௌத்த அடிப்படைவாதம் – சாணக்கியன் சாடல்

இலங்கையிலும் பௌத்த அடிப்படைவாத செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
கலகொட அத்தே ஞானசார தேரரின் செயற்பாடுகளை பார்க்கும்போது இந்த நிலைமையை காணமுடிகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் கொல்லப்பட்டமைக்கு இலங்கையர்கள் பலரும் அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர். இது கவைலைக்குாிய விடயம்

எனினும் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இதேபோன்ற சம்பவங்கள் இடம்பெறுகின்றன என்று அவர் இன்று நாடாளுமன்றில் கூறியபோது, குறுக்கிட்ட அமைச்சர் விமல் வீரவன்ச, பாகிஸ்தானில் இடம்பெற்ற சம்பவம் அடிப்படைவாதத்தின் அடிப்படையில் இடம்பெற்றது என்று குறிப்பிட்டார்.

எனவே அந்த சம்பவத்தையும் இலங்கையில் அரசியல் ரீதியாக இடம்பெறும் சம்பவங்களையும் சமமானக் கருதக்கூடாது என்று தெரிவித்தார்

இதற்கு பதிலளித்த சாணக்கியன் 1956ஆம் ஆண்டில் இருந்து 1970 ஆம் ஆண்டு காலப்பகுதி வரையில் அரசியல் ரீதியில் உரிமைகளுக்காக தமிழர்கள் போராடியபோதும் பயன் கிடைக்காத நிலையிலேயே ஆயுதப்போராட்டம் ஆரம்பமானது என்று சுட்டிக்காட்டினார்.
இதேவேளை கோட்டாபய ராஜபக்சவின் மூன்றாவது ஆண்டு காலத்தில் இனப்பிரச்சனையை தீர்க்கப்பட்டால் இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப சர்வதேச நாணய நிதியத்திடமோ அல்லது ஏனைய நிதி நிறுவனங்களிடமோ செல்லவேண்டியதில்லை என்றும் சாணக்கியன் குறிப்பிட்டார் 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!