தற்கொலை இயந்திரத்திற்கு அனுமதியளித்த சுவிஸ் அரசாங்கம்!

ஒருவர் தனது வாழ்க்கையை முடித்துக்கொள்ள விரும்பினால் 3D பிரிண்டர் மூலம் உருவாக்கக்கூடிய சிறிய தற்கொலை காப்ஸ்யூல்களை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று சுவிட்சர்லாந்து மருத்துவ மறுஆய்வு வாரியம், சட்டப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியா உட்பட ஒரு சில நாடுகளில் மனிதன் தற்கொலை செய்துகொள்வது சட்டப்படி குற்றம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் உடல் ஊனமுற்று வாழ்வில் இனி செயல்படவே முடியாது என்ற நிலையில் இருக்கும் ஒருவரை கருணை கொலை செய்வதற்கு கூட இந்தியாவில் சட்டப்படி அனுமதி பெற வேண்டும். ஆனால் ஒரு சில நாடுகளில் வாழ்கையை முடித்துக்கொள்ள விரும்புவர்கள் தற்கொலை மற்றும் கருணைகொலை குறித்து அதிகாரப்பூர்வ சட்டம் அமலில் உள்ளது.
    
அந்த வகையில் சுவிஸ் நாட்டில் மனிதன் தனது வாழ்ககையை முடித்துக்கொள்ள விரும்பினால் அவர்கள் தற்கொலை செய்துகொள்ள பல வழிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த 1942-ம் ஆண்டு முதல் சுவிஸ் நாட்டில் தற்கொலை செய்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், உடல் வலி இல்லாமல் மன அமைதியுடன் தற்கொலை செய்துகொள்ள அங்கு ஏற்கனவே இரண்டு வழிகள் உள்ள நிலையில், தற்போது 3-வதாக சர்கோ சூசைட் பாட் அறிமுகப்பட்டுள்ளப்பட்டுள்ளது.

எக்ஸிட் இன்டர்நேஷனல் நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த சர்கோ சூசைட் பாட், வாழ்கையை முடித்துக்கொள்ள விரும்புவர்களுக்கு அவர்கள் தற்கொலை செய்துகொள்ள உதவுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் தற்கொலை செய்துகொள்ள விரும்புவோர் இந்த பாட் உள்ளே சென்று அவர்களே இயக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக தி டெய்லி மெயில் ( The Daily Mail .) தெரிவித்துள்ளது. மேலும் லாப நோக்கற்ற நிறுவனமான எக்சிட் இன்டர்நேஷனல் தன்னார்வ கருணைக்கொலையை சட்டப்பூர்வமாக்குவதற்கு பரிந்துரைக்கப்படுகிறது.

தனது வாழ்க்கையை முடித்துக்கொள்ள விரும்பும் ஒருநபர், முதலில் தனது வாழ்க்கையை முடித்துக்கொள்வதற்கான முடிவில் உறுதியாக இருக்கிறாரா என்பது குறித்து ஒரு கணக்கெடுப்பு நடத்தப்படும். இதில் அவர்கள் முன் பதிவு செய்யப்பட்ட ஒரு சில கேள்விகளுக்கு அவர் பதிலளிக்க வேண்டும். பதில் அளித்த பிறகு பாட் உள்ளே சென்று செயல்முறையைத் தொடங்க ஒரு பொத்தானை அழுத்த வேண்டும். அதன்பிறகு பட் உள்ளே இருக்கும் உட்புற ஆக்ஸிஜன் அளவைக் குறைப்பதன் மூலம், தற்கொலை மேற்கொள்ள முடியும். இந்த சர்கோ பாட் பயனரால் உள்ளே இருந்து இயக்கப்படும்.

இந்த செயல்முறை ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தை எடுத்துக்கொள்ளும். அந்த நேரத்தில், ஹைபோக்ஸியா மற்றும் ஹைபோகாப்னியா மூலம் மரணம் நிகழ்கிறது, இது ஒரு நபரை ஒப்பீட்டளவில் அமைதியாகவும் வலி இல்லாமலும் மரணிக்க உதவுவதாக தி இன்டிபென்டன்ட் ( The Independent .) தெரிவித்துள்ளது.

இது குறித்து கருணைக்கொலை ஆர்வலரும் எக்சிட் இன்டர்நேஷனல் நிறுவனருமான டாக்டர் பிலிப் நிட்ச்கே, கூறுகையில், பாட்டின் முக்கிய அம்சங்களில் இது ஒரு ‘அழகான வெளிப்புற அமைப்பு என்று கூறியுள்ளார். மேலும். ‘எந்தவிதமான மனநல மதிப்பாய்வையும் செயல்பாட்டில் இருந்து அகற்றி, தனிநபரைத் தாங்களே கட்டுப்படுத்திக் கொள்ள அனுமதிக்க விரும்புகிறோம். ஒரு நபரின் மனத் திறனை நிலைநாட்ட செயற்கை நுண்ணறிவுத் திரையிடும் அமைப்பை உருவாக்குவதே எங்கள் நோக்கம். ஆனால் இது குறித்து மருத்துவர்கள் தரப்பில், இயற்கையாகவே நிறைய சந்தேகங்கள் உள்ளன, சுவிஸ்.இன்ஃபபோவிடம் ( swissinfo.ch ) கூறியுள்ளார்.

சுவிட்சர்லாந்து 1942 ஆம் ஆண்டில் தற்கொலைக்கு உதவுவது சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒரு காப்ஸ்யூலை உட்கொண்டு தற்கொலை செய்துகொள்ளும் முறை கடைபிடிக்கப்பட்டது. இந்த காப்ஸ்யூல் ஒரு நபரை அவர் இறப்பதற்கு முன் கோமா நிலைக்கு கடத்துகிறது. அதன்பிறகு கடந்த ஆண்டு டிக்னிடாஸ் மற்றும் எக்சிட் ஆகிய கருணைக்கொலை அமைப்புகளின் சேவைகளை சுமார் 1,300 பேர் பயன்படுத்தியுள்ளனர். ஆனாலும் சர்கோ சில விமர்சனத்தை எதிர்கொண்டன.

இது தொடர்பாக கடந்த 2018-ம் ஆண்டு இன்டிபென்டன்ட் பேட்டியில் பேசிய டாக்டர் நிட்ச்கே, ‘ஹோலோகாஸ்டின் எதிர்மறையான அர்த்தங்கள் காரணமாக ஐரோப்பாவில் உதவி தற்கொலைக்கு எரிவாயு ஏற்றுக்கொள்ளக்கூடிய முறையாக இருக்காது என்று கூறினார். அதில் ‘சிலர் இது ஒரு புகழ்பெற்ற எரிவாயு அறை என்று பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

தற்போது இரண்டு சார்கோ முன்மாதிரிகள் நடைமுறையில் உள்ள நிலையில், எக்சிட் இன்டர்நேஷனல் மூன்றாவது இயந்திரத்தை 3D பிரிண்டர் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பாட், அடுத்த ஆண்டு சுவிட்சர்லாந்தில் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!