நாடு முடக்கப்படுகின்றதா? – சுகாதார அமைச்சு வெளியிட்ட தகவல்

நாட்டினை முழுமையாக முடக்காது கோவிட் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சுகதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.   

இதேவேளை, கோவிட் வைரஸ் பரவல் தொடர்பில் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது. சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தலைமையில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், நாட்டை முடக்காமல் கோவிட் பரவலை கட்டுப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்படும் என்றார். நாட்டின் சகல பிரஜைகளுக்கும் இரண்டு தடுப்பூசிகளையும் வழங்குவதைக் கட்டாயமாக்குவதற்கான சட்ட ஏற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, கோவிட் பரவல் வேகமெடுத்துள்ள நிலையில் அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுகாதாரத் துறை சுட்டிக்காட்டியுள்ளது.  

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!