வசந்த கரன்னாகொடவிற்கு ஆளுநர் பதவி! – சுமந்திரன் எம்.பி கடும் கண்டனம்

வடமேல் மாகாண ஆளுநராக கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கரன்னாகொட நியமிக்கப்படவுள்ளாரென தகவல் வெளியாகியுள்ளது.

அங்கு ஆளுநராக பணியாற்றிய ராஜா கொல்லுரே உயிரிழந்ததையடுத்து இந்த நியமனம் வழங்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, வசந்த கரன்னாகொட ஆளுநராக நியமிக்கப்படவுள்ளமைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் இதனை கூறியுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

கப்பம் பெற்றுக்கொள்ளும் நோக்கில் 11 இளைஞர்களை கடத்தியதாக வசந்த கரன்னாகொடவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எனினும், அந்த குற்றப்பத்திரிகை சட்டமா அதிபரினால் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தியா, பிரித்தானியா போன்ற நாடுகளில் சட்டமா அதிபர் பதவி அரசியல் நியமனமாக இருந்தாலும், பதவியேற்றதன் பின்னர் சட்டமா அதிபர் சுயாதீனமாக செயற்படுகின்றார்.

எனினும், இலங்கையில் அந்த நிலைமை இல்லையென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வசந்த கரன்னாகொட ஆளுநராக நியமிக்கப்படவுள்ளமைக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவும் கண்டனம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!