சட்டத்துக்கு முரணான செயலணி!

ஒரு நாடு ஒரு சட்டம் அமைக்க ஆலாேசனை வழங்குவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் செயலணியின் தலைவர், பெளத்த தேரர் ஒருவரை மோசமான விமர்சிக்கும் குரல் பதிவொன்று சமூக வலைத்தலங்களில் பரவிச்செல்கின்றது. இந்த செயலணியின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் தேரரின் நடவடிக்கைகள் தொடர்பில் எமக்கு திருப்தியடைய முடியாது என எதிர்கட்சி உறுப்பினர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
ஒருநாடு ஒருசட்டம் அமைப்பதற்கு தேவையான ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதற்காக ஜனாதிபதி செயலணி அமைக்கப்பட்டிருக்கின்றது. அதன் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது, நாட்டின் நீதிமன்றத்தை அவமதித்த மற்றும் பல்வேறு சந்தர்ப்பங்களில் வன்முறையை தூண்டும்வகையில் செயற்பட்ட குற்றத்துக்காக நீதிமன்றத்தினால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டடிருந்து, ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்ட தேரர் ஒருவர்.

இந்த நியமனம் 2018 ஒக்டோபர் 26 சட்டத்துக்கு முரணாக அமைக்கப்பட்ட அரசாங்கம் போன்றே சட்டத்துக்கு முரணாகும். இந்த செயலணி தொடர்பில் எவ்வாறான நிலைப்பாடு இருந்தாலும் செயலணியின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் தேரரின் நடவடிக்கைகள் தொடர்பில் எமக்கு திருப்தியடைய முடியாது. தற்போதும் குறித்த தேரரின் குரல் பதிவொன்று சமூக வலைத்தலங்களில் பரவிச்செல்கின்றது. இது எமது பெளத்த தேரர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றது. அதனால் குறித்த தேரரின் இந்த நடவடிக்கை தொடர்பில் ஜனாதிபதியின் நிலைப்பாடு என்ன என கேட்கின்றோம்.

அத்துடன் தனியார் சட்டங்களுக்கு பாதிப்பு இல்லாதவகையிலேயே ஒருநாடு ஒருசட்டம் அமைக்கப்படுவதாக அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மத்திய கிழக்கு நாடுகளின் தூதுவர்களை அழைத்து குறிப்பிட்டுள்ளார். அப்படியாயின் எதற்காக ஒருநாடு ஒருசட்டம் செயலணி அமைக்கப்பட்டது என கேட்கின்றேன்.

ஏனெனில் குற்றவியல் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு இதனை மேற்கொள்ளவில்லை. நீதி அமைச்சருக்கு கீழே இந்த நடவடிக்கைகள் இடம்பெறவேண்டும். என்றாலும் நீதி அமைச்சருக்கும் தெரியாமலேயே இந்த செயலணி அமைக்கப்பட்டிருக்கின்து. மேலும் தற்காலத்தில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சில நடவடிக்கைகளால் அதன் நம்பிக்கை இல்லாமல்போய் இருக்கின்றது. கடந்த காலங்களில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட பல குற்றங்கள் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் வாபஸ் பெற்றுவந்திருக்கின்றன.

அதற்கு தெரிவிக்கப்படும் காரணம்தான், இந்த வழக்குள் அரசில் நோக்கத்துடன் தொடுக்கப்பட்டவை என்று. அப்படியாயின் முன்னாள் சட்டமா அதிபர்தான் தற்போது பிரதம நீதியரசராக இருக்கின்றார்.
அவர் அன்று அரசியல் ரீதியில் செயற்பட்டிருந்தால் தற்போது அவர் வழங்கும் தீர்ப்புகள் குறித்து பொறுப்பு கூற முடியுமா என கேட்கின்றேன். அதனால் பொலிஸ் திணைக்களம் அரசியல் மயமாகி இருக்கின்றதை யாரும் அறிந்த விடயம். ஆனால் சட்ட அதிபர் திணைக்களத்தை அந்த நிலைக்கு கொண்டுசெல்லக்கூடாது. கடந்த காலங்களில் சட்டமா அதிபர் திணைக்களம் ஜனாதிபதிக்கு கீழே இருந்தது. அதனை எமது காலத்திலேயே நீதி அமைச்சுக்கு கீழ் கொண்டுவந்தோம்.

அத்துடன் சிறைக்கைதிகளை பயன்படுத்திக்கொண்டு மனிதவள நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. சட்டத்தின் பிரகாரம் ஒருவாரத்துக்கு 48 மணி நேரத்துக்கு மேல் கடுமையான வேலைகளை அவர்களிடம் இருந்து பெறமுடியாது. அதேபோன்று அவர்களை நாள்தோரும் சுகாதார ஆலாேசனைக்காக அனுப்பவேண்டும்.

அப்படி இருக்கையில், இன்று கட்டுமன வேலைகளுக்கு இந்த கைதிகளை அனுப்பி நாள் ஒன்றுக்கு 3ஆயிரம் ரூபாவுக்கும் அதிகம் பெறப்படுகின்றது. இந்த பணம் எங்கே செல்வது, அரசாங்கத்துக்கு கிடைக்கின்றதா? ஆனால் கைதிகளின் வங்கி கணக்குக்கு 500ரூபா செல்கின்றது.
தொழில் பயிற்சி வழங்குவதாக தெரிவித்தே தெரிவிக்கப்படுகின்றது. எனவே இவ்வாறான நடவடிக்கைகள் சட்டத்துக்கு முரணாகும் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!