
இந்த சட்டம் அமலுக்கு வந்து, 65 ஆண்டுகளுக்கு பிறகும் கடைகளுக்கு சென்று சிகரெட் வாங்க முடியும். ஆனால் அவர்கள் தங்களுக்கு 80 வயதாகி விட்டது என்பதற்கான ஆதாரத்தை வழங்க வேண்டும். ஆனால் நடைமுறையில் பல தசாப்தங்களுக்கு (தசாப்தம் என்பது 10 ஆண்டுகள்) முன்பாகவே சிகரெட் பிடிக்கும் பழக்கம் மறைந்து விடும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர். 2008-ம் ஆண்டுக்கு பின்னர் பிறந்தவர்கள் சிகரெட்டுகளோ, பிற புகையிலை பொருட்களோ தங்கள் வாழ்நாளில் வாங்க முடியாமல் போய் விடுமாம்.
இதுபற்றி அந்த நாட்டின் சுகாதார மந்திரி டாக்டர் ஆயிஷா வெரால் கூறும்போது, “இளைஞர்கள் ஒருபோதும் புகைபிடிக்க தொடங்கக்கூடாது என்பதை நாங்கள் உறுதிசெய்ய விரும்புகிறோம்” என தெரிவித்தார். நியூசிலாந்து அரசு அமல்படுத்த உள்ள இந்த புதிய சட்டத்தை டாக்டர்களும், சுகாதார நிபுணர்களும் வரவேற்றுள்ளனர்.
இந்த சட்டம் பற்றி ஒட்டகோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜானட் கூக் கருத்து தெரிவிக்கையில், “இந்த சட்டமானது சிகரெட் புகைப்பதை மக்கள் நிறுத்த உதவும் அல்லது குறைக்க உதவும். இதனால் இளைய தலைமுறையினர் நிகோடினுக்கு அடிமையாவது குறைந்து விட வாய்ப்பு இருக்கிறது” என தெரிவித்தார். 2025-ம் ஆண்டுக்குள் அந்த நாட்டில் புகைபிடிப்போர் விகிதத்தை 5 சதவீதமாக குறைக்க இந்த சட்டம் வழிகாட்டும், இறுதியில் அதை முற்றிலுமாக அகற்றும் என்று நியூசிலாந்து அரசு நம்புகிறது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!