மூழ்கும் கப்பலில் ஏறும் அளவுக்கு எனக்கு பைத்தியம் பிடிக்கவில்லை:ரணில்

மூழ்கும் கப்பலில் ஏறும் அளவுக்கு தனக்கு பைத்தியம் பிடித்து விடவில்லை என முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க, (Ranil Wickramasinghe) சில நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூறியுள்ளார்.

பிரதமர் பதவி ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்படவுள்ளதாக வதந்தி பரவி வருவதாகவும் அதில் உண்மை இருக்கின்றதா என நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தை பொறுப்பேற்றால், பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என சிலர் கருதுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.

நாட்டின் டொலர் கையிருப்பானது ஜனவரி மாதத்துடன் முடிந்து விடும் நிலைமைக்கு வந்துள்ளதாகவும் பொருளாதாரம் மிகவும் சிரமமான இடத்தில் இருப்பதால், அடுத்த ஆண்டு மிகவும் கஷ்டமான ஆண்டாக இருக்கும் எனவும் ரணில் குறிப்பிட்டுள்ளார்.  

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!