வாக்குகளுக்காக நிபந்தனைகளுக்கு அடிபணியோம்!

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு வழங்க வேண்டுமெனில், விடுதலைப் புலி உறுப்பினர்களை விடுதலை செய்யுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவிப்பாராயின், அவ்வாறானவர்களின் ஆதரவு தங்களுக்கு தேவையில்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.
    
தொடர்ந்து கருத்து வெளியிட்ட அமைச்சர் அமரவீர, நாட்டில் இனவாதத்தை ஏற்படுத்துவதற்கோ அல்லது விடுதலைப் புலிகள் மீள் உருவாவதற்கோ ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை எனவும் தெரிவித்தார்.

சாணக்கியன் உள்ளிட்டோரின் வாக்குகளை அவர்களே வைத்துக்கொள்ளட்டும், அவர்களின் நிபந்தனைகளுக்கு நாங்கள் அடிபணியப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!