தென் ஆப்பிரிக்காவிற்கு செல்ல வேண்டாம்: சுற்றுலாத்துறை வெளியிட்ட முக்கிய தகவல்!

தென் ஆப்பிரிக்காவில் புதிதாக தோன்றிய Omicron வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் வெளிநாட்டினர் வருகை குறைந்துள்ளதாக அந்நாட்டின் சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது. புதிய கொரோனா வகை Omicron வைரஸ் உலக நாடுககளை அச்சுறுத்தி வருகின்றது. இந்த வைரஸ் முதலில் தென் ஆப்பிரிக்காவில் தான் கண்டுபிடிக்கப்பட்டது.
    
இதனை தொடர்ந்து 50 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளதாக உலக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் உருமாற்றமடைந்த கொரோனாவிற்கு ‘Omicron’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த Omicron கொரோனா வைரஸ் காரணத்தால் சுமார் 70சதவீத வெளிநாட்டினர் சுற்றுப் பயணத்திற்காக போட்டிருந்த முன்பதிவை ரத்து செய்துள்ளார்கள். அதோடு மட்டுமின்றி நெல்சன் மண்டேலா வசித்துவந்த வீட்டையும் காண வருவோரின் எண்ணிக்கை அதிரடியாக குறைந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் தென்னாபிரிக்காவின் சுற்றுலாத்துறை மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அதன் ஊழியர்கள் தெரிவித்துள்ளார்கள். தற்போது கொரோனா நோய் முடிவுக்கு வந்துவிட்டதாகவும், இதனை தொடர்ந்து Omicron பயங்கர பாதிப்பை ஏற்படுத்தும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!