இன்னும் ‘மோசம்’ என்ற நிலையிலேயே டெல்லி காற்று மாசு

டெல்லியில் காற்று மாசு நிலை இன்னும் ‘மோசம்’ என்ற அளவிலேயே இருப்பதால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

டெல்லியில் கடந்த மாதம் 3-வது வாரத்தில் இருந்தே காற்று மாசு தரநிலை மிகவும் மோசமாக இருந்து வருகிறது. முதலில் மிகமிக மோசம் என்ற நிலையில் இருந்ததால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டன. தொழிற்சாலைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இருந்தாலும் இன்று வரை காற்றின் தரநிலையில் மிகப்பெரிய அளவில் முன்னேற்றம் இல்லை. இன்றும் காற்றின் தரக் குறயீடு 256 எனற ‘மோசம்’ நிலையில்தான் உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!