இங்கிலாந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள அசாஞ்சே பக்கவாதத்தால் பாதிப்பு

அமெரிக்காவின் ராணுவ ரகசியங்களை விக்கி லீக்ஸ் இணையதளத்தில் எனும் வெளியிட்டு உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய ஜூலியன் அசாஞ்சே, தற்போது இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள பெல்மார்ஷ் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.

அவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்துவதற்கு தடை விதித்து லண்டன் கோர்ட்டு கடந்த ஜனவரி மாதம் வழங்கிய தீர்ப்பை இங்கிலாந்து மேல்முறையீட்டு கோர்ட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு ரத்து செய்தது. எனவே அவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்துவதற்கான கதவுகள் திறந்துள்ளன. இதுகுறித்து இங்கிலாந்து அரசு முடிவெடுக்கும். ஆனால் அசாஞ்சேவின் ஆதரவாளர்கள் அவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அசாஞ்சே பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது காதலி ஸ்டெல்லா மோரிஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் “கடந்த அக்டோபர் மாதம் 27-ந்தேதி நடந்த கோர்ட்டு விசாரணைக்கு அசாஞ்சே காணொலி காட்சி வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டபோது அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டது. தற்போதும் அவருக்கு அந்த நோய் பாதிப்பு உள்ளது. எனவே அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!