கொரோனா அச்சத்தில் குடும்பத்தை கொடூரமாக கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட மருத்துவர்!

இந்தியாவில் கொரோனா யாரையும் விட்டு வைக்காது என்று கூறி, மருத்துவர் ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு குடும்பத்தினரை கொடூரமாக கொலை செய்துவிட்டு, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது.
    
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரின் கல்யாண் பூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில், தடயவியல் பேராசிரியராக வேலை செய்து வந்தவர் தான் மருத்துவர் சுஷில் சிங். 55 வயது மதிக்கத்தக்க இவருக்கு, சந்திரபிரபா(50) என்ற மனைவியும், 21 வயதில் ஷிகார் சிங் என்ற மகனும் குஷி சிங் (16) என்ற மகனும் இருந்தனர்.

இந்நிலையில், கடந்த 3-ஆம் திகதி சுஷில் சிங் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்துவிட்டு தப்பி ஓடினார். மனைவிக்கு டீ யில் மயக்க மருந்து ஒக்டுத்து, சுத்தியலால் அடித்து கொலை செய்த அவர், மகன மற்றும் மகள் இருவரையும் கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்ட போது, சுஷில் சிங் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று அவர்களிடன் வீட்டில் சிக்கியுள்ளது. அதில், தான் குணப்படுத்தமுடியாத நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மன அழுத்தத்தில் உள்ளதாகவும், கொரோனா யாரையும் விட்டுவைக்காது.

எனது குடும்பத்தை பிரச்சினையில் விட்டுவிட்டு செல்ல விரும்பவில்லை. அவர்களை விடுதலை செய்து பிரச்சினைகளில் இருந்து வெளியேற்ற விரும்புகிறேன் என குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து பொலிசார் அவரை தேடி வந்த நிலையில், சுஷில் சிங், கான்பூர் மாவட்டம் சித்நாத் ஹட் பகுதியில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சுஷில் சிங்கின் ஆதார் அட்டை, செல்போன், டிரைவிங் லைசன்ஸ் உள்பட ஆவணங்கள் வைத்து பொலிசார் அடையாளம் கண்டு உறுதி செய்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!