“ஒமைக்ரானின் அறிகுறி இது தான்” – தென் ஆப்பிரிக்கா நோயாளிகள் சொன்ன தகவல்!

உலகையே தற்போது பயத்தில் ஆழ்த்தி வரும் ஒமைக்ரான் வைரஸின் அறிகுறிகள் முதன் முதலில் எப்படி இருந்தது என்பது குறித்த விபரம் வெளியாகியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமைக்ரான் வைரஸ், முன்பு இருந்த கொரோனா வைரஸ் பரவல்களில் இருந்து, வேறுபட்டதாக உள்ளது.

குறிப்பாக பிரித்தானியாவில்,அதிக வெப்ப நிலை, புதிதாக தொடர் இருமல், வாசனை மற்றும் சுவை இழப்பு இருந்தால், பிசிஆர் சோதனை எடுத்துக் கொள்ளும் படி அறிவுறுத்தப்படுகிறது.
ஒமைக்ரான் தன்னுடைய ஆரம்பகால அறிகுகள் ஐந்து தனித்துவமான அறிகுறிகளை காட்டுகிறது
தொண்டையில் வலிக்கு பதிலாக ஒரு கீறல் போன்ற உணர்வு

உலர் இருமல்
மிகுந்த சோர்வு
லேசான தசை வலிகள்
இரவு நேரங்களில் வியர்ப்பது
இந்த ஒமைக்ரான் வைரஸ் பரவலை சந்தேகித்த முதல் நபர்களில் ஒருவரான தென் ஆப்பிரிக்கா மருத்துவ சங்கத்தின் தலைவர், மருத்துவர் Angelique Coetzee, ஒமைக்ரான் வைரஸ் டெல்டா மாறுபாட்டிலிருந்து வேறுபட்ட அறிகுறிகளை கண்டதாக பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு கூறியுள்ளார்.

கடந்த நவம்பர் 18-ஆம் திகதி கிளினிற்கு வந்த ஏழு நோயாளி சாதரண ஒரு வைரஸ் தொற்றுடன் தொடர்புடையதாக வந்தனர். அவர்களிடம் காணப்பட்ட அறிகுறிகள் வேறுபட்டதாக இருந்தது.
அவர்களுக்கு, தீவிர சோர்வு, லேசான தசை வலி, தொண்டை அரிப்பு(வலி கிடையாது) மற்றும் வறட்டு இருமல் ஆகியவை கொண்டிருந்தனர்.

முந்தைய கொரோனா வைரஸ்களைப் போன்று, இந்த ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுவை மற்றும் வாசனை இழப்பு தன்மை ஏற்படவில்லை.

இரவு நேரத்தில் தூங்கும் போது, இவர்களுக்கு அதிக நேரம் வியர்த்துள்ளது. இதனால் உடை ஈரமாகியுள்ளது, போன்ற மாறுதல்கள் தான் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், தென்னாப்பிரிக்காவின் சுகாதாரத் துறையால் கூட்டப்பட்ட ஒரு மாநாட்டில், ஒமைக்ரான நோயால் பாதிக்கப்பட்ட பல நோயாளிகள் சொன்ன ஒரே அறிகுறி இரவில் வியர்ப்பது தான் என்று கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!