லண்டனில் இ-ஸ்கூட்டர்களை கொண்டு செல்ல தடை!

லண்டனில் இ-ஸ்கூட்டர்களை ரயில்கள், சுரங்க வழி ரயில்கள் மற்றும் பேருந்துகளில் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் E-scooter-களால் தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், (13.12.2021) முதல் E-scooters பொதுபோக்குவரத்துகளில் கொண்ட செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
    
இது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், லண்டனில் உள்ள சுரங்க வழி ரயில்கள், ரயில்கள் மற்றும் பேருந்துகளில் E-scooter கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால், மீறினால் 1,000 பவுண்ட் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, மடக்க கூடிய, எடுத்து செல்லக் கூடிய மற்றும் மின்-யுனிசைக்கிள்களை கொண்ட E-scooter-ன் பேட்டரிகளில் தீப்பிடிப்பதாக புகார் வந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சமீபத்தில், Stanmore-ன் TfL டிப்போவில் விட்டுச் சென்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தானாகவே தீப்பிடித்து எரிந்தது. இதனால், TfL-ஆல் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு மதிப்பாய்வில், இந்த வகை ஸ்கூட்டர்களால் இரண்டால் நிலை தீ விபத்து காயங்கள் ஏற்படுவது தெரியவந்தது.

இதன் காரணமாக, பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக இன்று முதல் Tyne, Wear Metro மற்றும் Shields Ferry-ல் இ-ஸ்கூட்டர்கள் தடைசெய்யப்படும் என்று Nexus கடந்த 10-ஆம் திகதி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தது.

ஸ்காட்லாந்தில் உள்ள தேசிய ரயில் இயக்குனரான ScotRail இந்த தடையை பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும், லண்டனில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த தடையை தீயணைப்பு படை (LFB) ஆதரித்துள்ளது. இந்த ஆண்டு இ-ஸ்கூட்டர்கள் மற்றும் இ-பைக்குகளால் 50-க்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்துள்ளதாகவும், இது கடந்த 2020-ஆம் ஆண்டை விட அதிகம் எனவும் தெரிவித்துள்ளது,

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!