வெளியானது உலகின் அதிக கொலைகள் நடக்கும் நாடுகளின் பட்டியல்!

கொலை விகிதத்தின் அடிப்படையில், 2021-ஆம் ஆண்டு எந்த நாட்டில் அதிக கொலைகள் நடந்துள்ளது என்பது தொடர்பான பட்டியல் வெளியாகியுள்ளது. உலகில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 65,000 கொலைகள் நடப்பதாக, கடந்த 2000-2017-ஆம் ஆண்டில் கணக்கிடப்பட்டது. அதன் படி கடந்த 2017-ஆம் ஆண்டு அதிக கொலைகள் நடந்த நாடுகளின் பட்டியலில் மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள El Salvador நாடு முதல் இடத்தில் இருந்தது.
    
இங்கு ஒரு லட்சம் பேரில் சுமார் 61.7 பேர் கொலை செய்யப்படுவதாக ஆய்வில் தெரியவந்தது.
இதையடுத்து தற்போது பிரபல ஆய்வு நிறுவனமான statista, இந்த 2021-ஆம் ஆண்டில் எந்த நாட்டில் அதிக கொலைகள் நடந்துள்ளது என்பது தொடர்பான ஆய்வு விவரத்தை வெளியிட்டுள்ளது.
இந்த ஆய்வின் முடிவின் அடிப்படையில், கடந்த ஏப்ரல் மாதம் வரை அதிக கொலைகள் நடந்த நாடுகளின் பட்டியலை எண்ணிக்கை அடிப்படையில் குறிப்பிட்டுள்ளது.
இந்த ஆய்வும் ஒரு லட்சம் பேரில் எத்தனை பேர் கொலை செய்யப்பட்டு இறக்கின்றனர் என்பதன் அடிப்படையிலே வெளியிடப்பட்டுள்ளது.

இதில் முதல் இடத்தில் El Salvador தான் உள்ளது.
இந்த புள்ளிவிவரங்களில் போர் மற்றும் வன்முறை மோதலினால் இறந்தவர்கள் குறித்து குறிப்பிடப்பட்டவில்லை.

உலகில் ஒரு சில நாடுகளில் தொடர்ச்சியான மோதல்கள் இருந்தாலும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் கொலைகளாக இந்த ஆய்வில் கருதப்படுவதில்லை.

இதன் காரணமாகவே, ஆப்கானிஸ்தான் மற்றும் எத்தியோப்பியாவை விட Latin America-வில் கொலை விகிதம் அதிகமாக உள்ளது.

தற்போது இருக்கும் உலகில் வன்முறை குற்றங்களை விட இதய நோய்கள், பக்கவாதம் மற்றும் புற்றுநோய் போன்ற நோய்கள் உயிருக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளன.
உலகில் அதிக கொலைகள் நடக்கும் நாடுகளின் டாப் 10 பட்டியல் (100,000 பேரில்)
El Salvador (82.84)
Honduras (56.52)
Venezuela (56.33)
United States Virgin Islands (49.26)
Jamaica (47.01)
Lesotho (41.25)
Belize (37.6)
Saint Vincent And The Grenadines (36.46)
Saint Kitts And Nevis (34.23)South Africa (33.97)

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!