சாதாரண பொதுமக்கள் அதிகாரப் பகிர்வினை கோரவில்லை! – ஞானசார தேரர்

நாட்டின் சாதாரண பொதுமக்கள் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டுமென கோரவில்லை என ஒரே நாடு ஒரே சட்டம் என்னும் ஜனாதிபதி செயலணியின் பிரதானி கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

சிறுபான்மை இன சமூகங்களை பிரதிநிதித்துவம் செய்யும் தலைமைகள் இன ஐக்கியத்திற்கு மாறாக இனப் பிளவினையே விதைத்து வருகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறனவர்களுக்கு அதிகாரங்களை வழங்கினால் நாடு பிரிவினையை நோக்கிச் செல்வதனை தடுக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

13ம் திருத்தச் சட்டத்தையோ அதற்கு அப்பாலான தீர்வினையோ பொதுமக்கள் கோரவில்லை எனவும் அதனை சிறுபான்மை இனங்களை பிரதிநிதித்துவம் செய்யும் தலைவர்களே கோரி நிற்கின்றார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

நாட்டின் சில பகுதிகளில் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற எண்ணக்கரு அமுல்படுத்தப்படுவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உதாரணமாக காத்தான்குடியில், பள்ளி சம்மேளனத்தினால் நிர்வாகம் செய்யப்படுகின்றது, அங்கு பொதுவான சட்டங்கள் அமுல்படுத்தப்படுவதில்லை என ஞானசார தேரர் தெற்கு பத்திரிகையொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!