41 பேர் அரசாங்கத்தை விட்டு விலகுகின்றனரா?

41 பேர் அரசாங்கத்தை விட்டு விலகத் தீர்மானித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தலைமையிலான தற்போதைய அரசாங்கத்திலிருந்து விலகப் போவதாக 41 உறுப்பினர்கள் உறுதி செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

ஆளும் கூட்டணிகளுடனும், எதிர்க்கட்சிகளுடனும் இந்தக் குழுவினர் பேச்சுவார்த்தை நடாத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்கத்தை விட்டு விலகியதன் பின்னர் எதிர்க்கட்சியுடன் நடாத்தும் பேச்சுவார்த்தைகளின் போது முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் நடாத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

கரு ஜயசூரிய நாடாளுமன்றை பிரதிநிதித்துவம் செய்யாத போதிலும் அவரது தலைமையை ஏற்றுக்கொள்வதற்கு பெரும்பான்மையானவர்கள் இணக்கம் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!