வடகொரியாவில் மக்கள் சிரிக்க தடை: கிம்மின் உத்தரவால் தவிக்கும் மக்கள்!

வடகொரியாவில் கிம் ஜாங் இல் உயிரிழந்து பத்து ஆண்டுகள் ஆன நிலையில், இந்த 10-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மது அருந்துவதற்கும், சிரிப்பதற்கும் அங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வடகொரியாவை கடந்த 1948-ஆம் ஆண்டு உருவாக்கியவர் தான் கிம் இல் சங். இவர் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் நாட்டை ஆண்டு வந்தார். கடந்த 1994-ஆம் ஆண்டு இவர் இறந்த பிறகு, அவருடைய மூத்த மகன் Kim Jong Il அதிபரானார்.
    
இவர் கடந்த 2011-ஆம் ஆண்டு(டிசம்பர் 17-ஆம் திகதி) உயிரிழந்ததால், தற்போது வடகொரியாவை Kim Jong Il-ன் மூன்றாவது மகன் ஆன, கிம் ஜாங் உன் மூன்றாவது தலைமுறையாக ஆண்டு வருகிறார்.

இந்நிலையில், இந்த ஆண்டு 10-வது ஆண்டு அவரின் நினைவு தினம் என்பதால், அதை முன்னிட்டு மதுபானம் அருந்துவதற்கும், சிரிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக வடகிழக்கு எல்லை நகரமான Sinuiju-வை சேர்ந்த வட கொரியர் ஒருவர் Radio Free Asia-விடம் கூறியதாக செய்தி வெளியாகியுள்ளது.

மேலும், அவர் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் இவருடைய நினைவு தினத்தில் 10 நாட்கள் துக்க நாட்களாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இந்த துக்க காலத்தில் மது குடிக்கக்கூடாது, அப்படி மது குடித்து கடந்த காலங்களில் பிடிபட்டவர்கள் பலர் கைது செய்யப்பட்டு, குற்றவாளிகளாக நடத்தப்பட்டனர். ஆனால், அவர்கள் எங்கு அழைத்து செல்லப்பட்டனர் என்பது தெரியவில்லை.

இன்று வரை அவர்களை மீண்டும் பார்க்கவில்லை. இந்த துக்க காலத்தில், உங்கள் குடும்ப உறுப்பினர் யார் இறந்தாலும், நீங்கள் சத்தமாக அழுக கூடாது, அதே போன்று பிறந்த நாள்களை கொண்டாட முடியாது என்று கூறினார்.

ஒவ்வொரு ஆண்டும், இந்த துக்க நாட்கள் 10 நாட்களாக மட்டுமே இருந்தது, ஆனால் இந்த ஆண்டு Kim Jong Il-ன் 10-வது ஆண்டு நினைவு தினம் என்பதால் ஒருநாள் அதிகரிக்கப்பட்டு, 11 நாட்கள் துக்க நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!