மேலும் 12 தமிழக மீனவர்கள் கைது!

தலைமன்னார் கடற்பகுதியில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட மேலும் 12 தமிழக மீனவர்கள் தலைமன்னார் கடற்படையினரால் நேற்று காலையில் கைது செய்யப்பட்டனர்.

    
இராமேஸ்வரம் தங்கச்சிமடம் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு ரோலர் படகுகளில் வருகை தந்த மொத்தம் 12 மீனவர்களை தலைமன்னார் கடற்படையினர் கைது செய்து தாழ்வுபாடு கடற்படை முகாமில் தடுத்து வைத்த நிலையில் ஞாயிற்றுகிழமை இரவு 8 மணியளவில் மன்னார் நீரியல் வள திணைக்களத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர். மேலதிக விசாரணையின் பின்னர் குறித்த 12 மீனவர்களும் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

இதேவேளை யாழ்ப்பாணம் – நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தவேளை கைதான 43 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து இந்திய மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!