சீனத் தூதுவரின் வடக்கு பயணம் – கூட்டமைப்பினர் ஏன் அஞ்சுகின்றனர்?

சீனத் தூதுவர் தலைமையிலான விஜயத்தைக் கண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஏன் அஞ்சுகின்றனர் என்று எமக்குப் புரியவில்லை என அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
    
இலங்கைக்கான சீனத் தூதுவர் தலைமையிலான குழுவினர் வடக்கு மாகாணத்துக்கு விஜயம் செய்தமை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அதன் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் அதிருப்தியான கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே அமைச்சர் தினேஷ் குணவர்தன மேற்கண்டவாறு கூறினார்.

வடக்கு மாகாண தமிழ் மக்கள் அபிவிருத்தியை விரும்புகின்றனர். ஆனால், இதைத்தடுக்கும் நடவடிக்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஈடுபடுகின்றனர். போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அபிவிருத்திதான் முக்கியம் என தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!