பிரித்தானியாவில் மீண்டும் ஊரடங்கா? – போரிஸ் விளக்கம்!

பிரித்தானியாவில் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதால், ஊடனடியாக ஊரடங்கு அமுலுக்கு வருமா என்ற கேள்விக்கு பிரதமர் போரிஸ் ஜோன்சன் மறுத்துள்ளார். ஒமைக்ரான் வைரஸ் பரவல் பிரித்தானியாவில் தீவிரமாக பரவி வருகிறது. இதற்கிடையில் கடந்த 24 மணி நேரத்தில், கொரோனாவால் புதிதாக 91,743 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    
இந்நிலையில், சமீபத்திய கொரோனா பரவலின் தரவை மதிப்பாய்வு செய்வதற்காக, பிரதமர் போரிஸ் ஜோன்சன் நேற்று (20.12.2021) அமைச்சரவையை கூட்டினார்.

கூட்டத்திற்கு பின் பேசிய அவர், பொதுமக்கள் மற்றும் பொது சுகாதாரம் பாதுகாப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுப்பதற்கான வாய்ப்புகளை நாங்கள் ஒதுக்க வேண்டும்.

ஏனெனில், கொரோனாவின் சமீபத்திய தரவுகள் ஒவ்வொரு மணி நேரத்திற்கு அதிகரித்து வருகிறது. . நிலைமை மிகவும் கடினமாக உள்ளது, லண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இப்போது குளிர்காலம் என்பதால், மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுவதுடன், தடுப்பூசி போட்டுக் கொள்ளும் படி அறிவுறுத்தினார்.

தற்போது நிலவும் இந்த சூழலில் அரசாங்கம் எந்த மாதிரியா நடவடிக்கைகளை எடுக்க போகிறது என்று கேட்ட போது, அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்க தயங்காது.
மேலும், ஊடனடியாக ஊரடங்கு அமுலுக்கு வருவதை நிராகரித்த அவர், புதிய நடவடிக்கைகள் விரைவில் செயல்படுத்தப்படலாம் என்று தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!