இஸ்ரேலின் முடிவால் ஆச்சரியத்தில் உலக நாடுகள்!

ஒமைக்ரான் வைரஸ் பரவல் காரணமாக, அதில் இருந்து மக்களை காப்பாற்ற நான்காவது தடுப்பூசி போடும் முடிவை இஸ்ரேல் எடுத்துள்ளது. மத்திய கிழக்கு நாடான இஸ்ரேல் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு நான்காவது கொரோனா வைரஸ் தடுப்பூசி போடுவதாக அறிவித்துள்ளது.
    
இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், கொரோனாவிற்கு நான்காவது தடுப்பூசியை வழங்குவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் நான்காவது தடுப்பூசியை வெளியிடும் முதல் நாடாக இஸ்ரேல் உள்ளது.

ஒமைக்ரான் மாறுபாட்டின் தீவிரம் அதிகம் உள்ளதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கூடுதல் தடுப்பூசி குறித்து நாட்டின் பிரதமர் Naftali Bennet கூறுகையில், இதன் மூலம் ஒமைக்ரான் வைரஸை நாம் கடக்க உதவும் என்று நம்புகிறோம்.

இஸ்ரேலைப் பொறுத்தவரை தொற்று நோயை சமாளிப்பதற்கான உலகளாவிய முயற்சிகளை தொடர்ந்து செய்து வருகிறது.

குறிப்பாக, உலகில் மூன்றாவது தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் இஸ்ரேல் முன்னோடியாக விளங்கியது. அதே போன்று நான்காவது தடுப்பூசி போடுவதிலும் முன்னோடியாக இருப்போம்.
எனவே மக்கள் தடுப்பூசி போட்டு கொள்ளுங்கள், இது உங்கள் உயிரைக் காப்பாற்றுகிறது, ஆரோக்கியத்திற்கு, வாழ்வாதாத்திற்கும் பொறுப்பேற்கும் என்று கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!