லொட்டரியின் பெயரில் நடக்கும் மோசடி: எச்சரிக்கை தகவல்!

இந்தியாவில் 25 லட்சம் ரூபாய் லொட்டரியில் விழுந்துள்ளதாக நம்பி போன் பேசிய நபர் இறுதியில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஏமாற்றப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது. பீகார் மாநிலத்தின், Manesar-ல் வாடகை வீட்டில் வசித்து வருபவர் சிவசந்தர் குமார்.
    
இவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் 13-ஆம் திகதி பெயர் தெரியாத எண்ணில் இருந்து போன் வந்துள்ளது. அந்த போன் எடுத்து பேசிய போது, நாங்கள் Kaun Banega Crorepati(நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி ஹிந்தி பெயர்) பேசுவதாகவும், உங்களுக்கு 25 லட்சம் ரூபாய் லொட்டரியில் பரிசு விழுந்துள்ளதாக கூறியுள்ளார்.

இதைக் கொஞ்சம் கூட யோசிக்காமல் உண்மை என்று நம்பிய, அவர் தொடர்ந்து பேசிய போது, தன்னுடைய மொபைல் எண்ணை கொடுத்துள்ளார். அதன் பின், லொட்டரி பணத்தை பெற வேண்டும் என்றால் அதற்கு வரி செலுத்த வேண்டும், செயலாக்க கட்டணம் செலுத்த வேண்டும் என்று பல காரணங்கள் கூறி, அவரிடம் 51 ஆயிரம் ரூபாய் கட்டும் படி கூறியுள்ளார்.

உடனே சிவசந்தர் குமார் கட்டியுள்ளார். அதன் பின்பு தான் அவர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். உடனடியாக இது குறித்து Manesar காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளும் அதிகாரி பங்கஜ் சிங் கூறுகையில், ஐந்துக்கும் மேற்பட்ட போன்களில் இருந்து அவருக்கு அழைப்பு வந்துள்ளது. லொட்டரி பணத்தை பெற வேண்டும் என்றால் பல்வேறு கட்டங்களில் பணம் செலுத்துமாறு கேட்டுள்ளனர்.

இதை நம்பி அவர் பணத்தை கொடுத்து ஏமாற்றமடைந்துள்ளார். தொடர்ந்து இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

இது போன்று லொட்டரியில் பணம் விழுந்துவிட்டதாகவும், உங்களுக்கு கிரிடிட் கார்ட் கொடுக்கவுள்ளதாகவும் கூறி, நடுத்தர குடும்பத்தினரை குறிப்பிட்ட சில கும்பல் இது போன்ற ஆசை வார்த்தை கூறி பணத்தை பெற்று வருவதாகவும், மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும் படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!