பின்னடைவு ஏற்பட கடந்த கால அரசே காரணம்: டக்ளஸ் தேவானந்தா

கோவிட் தொற்று காலமாக மக்களின் அன்றாட வாழ்வாதாரம் பின்னடைவைச் சந்தித்துள்ள நிலையில் காணப்படுகிறது.

ஆனால் எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு மக்களின் அன்றாட வாழ்வாதாரத்தினை உயர்த்தும் நிகழ்ச்சி திட்டமாக அமைந்துள்ளதாகக் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ். பிரதேச செயலப்பிரிவிற்குட்பட்ட யாழ். மணியந்தோட்டம் பகுதியின் கடற்றொழிலாளர் சமூக மட்ட மக்களுடனான சந்திப்பு இன்று மணியந்தோட்டம் சன சமூக நிலையத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த கால அரசாங்கத்தின் மக்கள் நலன் அக்கரை இன்றி செயற்பட்டதன் காரணமாகத் தான் மக்களின் வாழ்வாதாரத்தில் பின்னடைவுக்கான நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது எமது அரசாங்கம் என்ற வகையில் எதிர்வரும் ஆண்டு மிகசிறந்தாக அமையும் என எதிர்பார்க்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

இதன் போது மணியந்தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தினை கட்டியேழும்பு இறங்குதுறைக்கான மீன் வாடி நிலைமையினையும் அவதானித்தார்.
இதில் கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களப் பணிப்பாளர் எஸ்.சுதாகர் உள்ளிட்ட அலுவலகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!