“என்னை தொடமுடியவில்லை, அதனால் இதை செய்கிறார்கள்” – சீமான் பேச்சு!

என்னை தொடமுடியவில்லை. அதனால் கூட இருப்பவர்களை கைது செய்து சிரமத்தை உருவாக்குகின்றனர் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார். இன்று கொளத்தூர் பகுதியில் பேட்டியளித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ”கொளத்தூர் பகுதியில் மேம்பாலம் கட்டுவதற்காக குறிப்பிட்ட இடம் எடுப்பதாக அதிகாரிகள் கூறிவிட்டு, மக்களை முன் அறிவிப்பு இல்லாமல் வெளியேற்றி இருக்கின்றனர்.
    
ஆனால் பாதுகாப்பாக மக்களை வெளியேற்றவில்லை. அப்படி பாதுகாப்பாக வெளியேற்ற திட்டமிட்டிருந்தால் இழப்பீடு, மாற்று இடம் குறித்து ஏன் இன்னும் பேசவில்லை? ஆக்கிரமிப்பு என்று அதிகாரிகள் ஏன் பேசுகின்றனர்? இவ்வளவு நாள் என்ன செய்தார்கள்? அனைத்து ஆவணங்களும் மக்களிடம் இருக்கிறது. குறிப்பிட்ட அவகாசம் கொடுத்திருக்கலாம்.

வள்ளுவர் கோட்டம் உட்பட பல நீர்நிலைகள் ஆக்கிரமிப்புதானே. முதல்வர் தொகுதியில் நடப்பதை ஏன் கவனிக்கவில்லை? முதல்வர் பல நல்ல விஷயங்களை தனது தொகுதியில் செய்து இருக்கிறார். திமுகவை விமர்சனம் செய்யவில்லை. ஆனால் அங்கு ஜனநாயகம் இல்லை. இஸ்லாமிய கைதிகளை விடுவிக்க வேண்டும் என தருமபுரியில் கூட்டம் நடத்தினர். அதனை கண்டுகொள்ளவில்லை. ஆனால் இஸ்லாமிய வாக்குகள் மட்டும் தேவை என்கின்றனர்.

கருத்து உரிமை எல்லோருக்கும் இருக்கிறது. கடந்த காலத்தில் நானும் பழிவாங்கப்பட்டேன். ஈழ தமிழர்களை பேசியதால் ஒராண்டு சிறையில் இருந்தேன். என் உரிமை நான் கூட்டத்தில் பேசும்போது செருப்பு காட்டி பேசினேன். அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் பேசுகின்றனர். என்னை தொடமுடியவில்லை. அதனால் கூட இருப்பவர்களை கைது செய்து சிரமத்தை உருவாக்குகின்றனர்” என்று பேசியுள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!