ஒரேநாடு ஒரே சட்டம் சாத்தியமற்றது!

பல்லின மக்களைக் கொண்ட இலங்கைக்கு, ‘ஒரேநாடு, ஒரே சட்டம்’ என்பது நடைமுறைக்கு சாத்தியமற்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
    
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், நாட்டிலுள்ள ஒவ்வொரு இனங்களுக்கும் அந்ததந்த இனங்களுக்குரிய சம்பிரதாயங்களின்படி வரலாற்று ரீதியாக சில சட்டங்கள் உள்ளன. எனவே அனைவருக்கும் ஒரு சட்டம் என இவற்றை ஒன்றிணைக்க முடியாது என்றார்.

அரசியல்வாதிகளுக்கு நடைமுறைப்படுத்தப்படும் சட்டம் கீழ்மட்ட மக்களுக்கு நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. எல்லோருக்கும் நியாயம் கிடைக்க வேண்டும். ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்று கூறும் அரசாங்கம் இதனையே செய்யுமென நான் எதிர்பார்த்தேன் என்றார்.
ஞானசார தேரர் போன்றவர்கள் தொடர்ந்து நாட்டில் இனவாதத்தை பரப்பிக்கொண்டிருந்தார்கள். இதனால் முஸ்லிம்களில் சிலர் இதற்கு வேறுவழியில் பதிலளித்தார்கள். ஒவ்வோர் இனத்துக்கும் வரலாற்றுரீதியில் வெவ்வேறான சட்டங்கள் காணப்படுகின்றன எனவும் கூறினார்.

குறிப்பாக முஸ்லிம், சிங்களவர்களுக்கு தனித்தனியாக உள்ள சில சட்டங்களை ஒன்றிணைத்து ஒரே சட்டமாகக் கொண்டுவர முடியாது. எனவே ஒரே சட்டம் என்பது நடைமுறையில் எந்தளவுக்கு சாத்தியம் என்பது தெரியவில்லை என்றார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!