திருக்கோவில் பொலிஸ் நிலையத்துக்குள் சூடு – 3 பொலிசார் பலி!

அம்பாறை-திருக்கோவில் பொலிஸ் நிலையத்திற்குள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்தனர். நேற்று இரவு நடைபெற்ற இந்த துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி உட்பட நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
    
குறித்த பொலிஸ் நிலையம் விசேட அதிரடிப்படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதுடன், துப்பாக்கிச்சூட்டு நடாத்திய பொலிஸ் உத்தியோகத்தர் மொனராகலவில் உள்ள பொலிஸ் நிலையத்தில் இரண்டு துப்பாக்கிகளுடன் சரணடைந்துள்ளார்.

துப்பாக்கிச்சூட்டு சம்பவம் காரணமாக அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதுடன், மக்கள் மத்தியில் பீதி நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்தவர்கள் கல்முனை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த மூவரில் ஒருவர் கல்முனை பாண்டிருப்பைச் சேர்ந்த தமிழ் காவல்துறை அதிகாரி என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!