மியான்மர் வன்முறை: 30-க்கும் மேற்பட்டோர் கொடூர கொலை!

மியான்மரில் பெண்கள், குழந்தைகள் உட்பட 30-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு சடலங்கள் எரிந்தநிலையில் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மியான்மர் வன்முறையால் பாதிக்கப்பட்ட கயா மாநிலத்திலே இச்சம்பவம் நடந்துள்ளது.

இதுதொடர்பாக Karenni மனித உரிமைகள் குழு கூறியதாவது, Hpruso நகரில் Mo So கிராமத்திற்கு அருகே மியான்மரை ஆளும் இராணுவத்தால் கொல்லப்பட்ட உள்நாட்டிற்குள் இடம்பெயர்ந்த மக்களின் சடலங்களை எரிந்த நிலையில் கண்டெடுத்தோம்.

மனித உரிமைகளை மீறும் மனிதாபிமானமற்ற மற்றும் கொடூரமான கொலையை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம் என தெரிவித்துள்ளது.

Mo So கிராமத்தில் எதிர்தரப்பு ஆயுதப் படைகளைச் சேர்ந்த குறிப்பிடப்படாத எண்ணிக்கையிலான ஆயுதங்களுடன் கூடிய பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றதாக மியான்மர் இராணுவம் மாநில ஊடகங்களில் தெரிவித்துள்ளன.

அவர்கள் ஏழு வாகனங்களில் வந்தனர் மற்றும் இராணுவத்தை தடுத்து நிறுத்திய போது நிறுத்தாமல் சென்றனர் என மியான்மர் இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!