தேங்கியுள்ள கொள்கலன்கள் இவ்வாரம் விடுவிப்பு!

டொலர் நெருக்கடி காரணமாக துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் இவ்வாரம் முதல் விடுவிக்கப்படும் என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
    
வர்த்தகத்துறை அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

டொலர் நெருக்கடி காரணமாக துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய சுமார் 1000 ஆயிரம் கொள்கலன்கள் இவ்வாரம் முதல் விடுவிக்கப்படும். டொலர் நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதி சேவையில் பாரிய சவால் நிலை தற்போது தோற்றம் பெற்றுள்ளன.

எனவே தேசிய உற்பத்திகளின் வீதம் அதிகரிக்கப்பட்டால் மாத்திரமே அத்தியாவசிய பொருட்களின் விலை குறைவடையும். தற்போதைய நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைவடையும் என கருத முடியாது. அத்தியாவசிய பொருட்களின் விலையினை குறைக்காவிடினும் அதிகரிக்காமல் இருப்பதற்கு அரசாங்கம் அதிக கவனம் செலுத்தியுள்ளது என்றும் அவர் கூறினார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!