அமைச்சர்களை பொரிந்து தள்ளிய ஜனாதிபதி!

ஆளும் கட்சியின் முக்கிய அமைச்சர்களான விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார மற்றும் உதய கம்மன்பில ஆகியோரின் நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி அதிருப்தி வெளியிட்டுள்ளார். ஊடக ஆசிரியர்களுடன் நேற்று நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
    
அமைச்சரவையில் அங்கம் வகித்துக் கொண்டு அமைச்சரவை தீர்மானத்திற்கு எதிராக நீதிமன்றம் செல்வதும், அமைச்சரவை தீர்மானங்களை பொதுவெளியில் விமர்சனம் செய்வதும் ஏற்புடையதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரவையில் அங்கம் வகித்துக் கொண்டு அமைச்சரவையை விமர்சனம் செய்து கூட்டுப் பொறுப்பினை உதாசீனம் செய்வதாகவே கருதப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தரவின் செயற்பாடுகள் குறித்து பகிரங்கமாக விமர்சனம் செய்வது பிழையானது எனவும், அதன் மூலம் மக்கள் மத்தியில் பிழையான எண்ணக்கரு உருவாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!