50 சதவீத மாணவர்களுடன் விரிவுரைகளுக்கு அனுமதி!

சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி 50 சதவீத மாணவர்களின் பங்குபற்றலுடன் இன்று முதல் விரிவுரைகள் உள்ளிட்ட செயற்பாடுகளை மேற்கொள்ள பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க இதனை அறிவித்துள்ளார்.
    
பல்கலைக்கழக மாணவர்களை இலக்கு வைத்து சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து துரித தடுப்பூசி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு கொவிட் தடுப்பூசிகளும் ஏற்கனவே அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் உள்ள கல்வி மற்றும் கல்விசாரா பணியாளர்கள் மற்றும் பெரும்பாலான மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!