திருகோணமலை எண்ணெய் குதங்களை நிர்வகிக்க புதிய நிறுவனம்

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்துடன் இணைந்து Trinco Petroleum Terminal Ltd என்ற பெயரில் புதிய நிறுவனம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

IOC நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ள எண்ணெய் குதங்களிலிருந்து அரசாங்கத்திற்கு கிடைக்கும் பங்கினை நிர்வகிப்பதற்காக குறித்த நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

குறித்த எண்ணெய் குதங்களின் ஒரு பகுதியை மீண்டும் அரசாங்கத்திற்கு பெற்றுக்கொள்வது தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!