ஜேவிபியுடன் கூட்டணி – தயாசிறியின் தனிப்பட்ட கருத்து!

மக்கள் விடுதலை முன்னணியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்த கருத்துக்கள் அவரது தனிப்பட்ட கருத்து என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உபதலைவரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

    
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், மக்கள் விடுதலை முன்னணியுடன் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி கூட்டணி அமைப்பது தொடர்பில் எந்தவிதமான கலந்துரையாடல்களும் இடம்பெறவில்லை. குறிப்பாக இது தொடர்பில் சுதந்திரக் கட்சியின் மத்தியச் செயற்குழு கூட்டத்தில் கலந்துரையாடப்படவில்லை என்றார்.

இதேவேளை, சுதந்திரக் கட்சியின் எந்தவொரு கூட்டத்திலும் கூட்டணி அமைப்பது தொடர்பில் கலந்துரையாடப்படவில்லை எனவும் தெரிவித்த அமைச்சர், ஜே.வி.பியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பில் சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர கூறிய கருத்துக்கள் அவரது தனிப்பட்ட கருத்து எனவும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி அமைப்பதற்கு எவருக்கும் எந்தவிதமான தடைகளும் இல்லை எனவும் அவர் இதன்போது கூறினார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!