பாரம்பரிய அரசியலில் நம்பிக்கையிழந்து “விரக்தி”யில் உள்ள இலங்கை மக்கள்!

சுற்றுலாப் பயணிகள் இன்னும் இலங்கையில் விடுமுறைக்கு அதிக விருப்பம் காட்டும்போது, ​​உள்ளூர் அரசியல்வாதிகள் ஏன் இந்த டிசம்பரில் வெளிநாட்டு விடுமுறைக்காக வெளிநாடுகளுக்குச் சென்றார்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

ஆங்கில செய்தித்தாள் ஒன்றில் கட்டுரை ஒன்றை தீட்டியுள்ள ஆய்வாளர் ஒருவர்,நாட்டில் டொலர் பற்றாக்குறை இருக்கும்போது அரசியல்வாதிகள் வெளிநாட்டில் செலவிடும் பணத்தை இலங்கையில் உள்ள விருந்தகங்களுக்கு செலவிட்டிருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

அது வர்த்தகத்தை நடத்திச்செல்லமுடியாது கஸ்டப்பட்டுக் கொண்டிருக்கும் விருந்தக உரிமையாளர்களுக்கு அது வருமானமாக இருந்திருக்கும் என்பது கட்டுரையாளரின் கருத்தாக அமைந்துள்ளது.

மக்கள் மத்தியில் மண்ணெண்ணெய்க்கான வரிசைகள், எரிவாயுவுக்கான போராட்டம், அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறை ஆகியவை தொடர்கின்றன.

இதன் காரணமாக மக்கள் விரக்தியடைந்துள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் ஒரு அரசியலற்ற ஒருவருக்கு வாக்களித்தனர்.

நாட்டை வளமான பாதையில் வழிநடத்துவார் என்ற நம்பிக்கையில் அவர்கள் வாக்களித்தனர்.

எனினும் துரதிர்ஷ்டவசமாக ஜனாதிபதியின் சிந்தனைகள் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளன.

வெளிநாடுகள், இலங்கைக்கு கடன் வழங்குவதிலும் இங்குள்ள திட்டங்களில் முதலீடு செய்வதிலும் ஆர்வம் காட்டி வருகின்றன.

ஆனால், வெளிநாட்டில் இருந்து ஒரு ஜனாதிபதி இங்கு வந்து, அரச தலைவராகி, நாட்டு மக்களுக்கு வழி காட்டுவார் என எதிர்பார்க்க முடியாது.

மக்கள் இன்று பாரம்பரிய அரசியலிலும் குடும்ப அரசியலிலும் மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள் என்றும் கட்டுரையாளர் தெரிவித்துள்ளார்.  

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!